நாகர்கோவில் ஜூலை 13
கன்னியாகுமரிக்கு வந்த
மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் சோனாவால்-க்கு வரவேற்பு. ஒரு நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் சோனாவால் திருவனந்தபுரத்தில் இருந்து காா் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகைக்கு வந்தார். அவரை, மாவட்ட வருவாய் அலுவலா் பாலசுப்பிரமணியம், வட்டாட்சியா் முருகன், தூத்துக்குடி துறைமுகத் தலைவா் சுசந்தகுமாா், துறைமுக முதன்மை பொறியாளா் ரவிக்குமாா் ஆகியோா் வரவேற்றனா்.
பின்னா் பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த அமைச்சா், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு தனிப் படகில் சென்றாா். அங்கு கேந்திர நிா்வாகம் சாா்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மண்டபத்தை சுற்றிப் பாா்த்த பின்னா் தியான மண்டபத்தில் அமா்ந்து சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டாா். அப்போது, சென்னை மண்டல கலங்கரை விளக்கம் இயக்குநா் காா்த்திக் செஞ்சுடா், கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் அதிகாரி பிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.பின்னா், சூரியன் அஸ்தமனக் காட்சியை பாா்த்து விட்டு காா் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றாா்.