ஈரோடு ஜூலை 17
சித்தோடு பேரூராட்சி பகுதியில் ரூ 68 லட்சம் மதிப்பில் புதிய திட்ட பணிகளை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.
சித்தோடு பேரூராட்சி 10 வது வார்டில் சக்தி மெயின் ரோட்டில் உள்ள சமுதாயக்கூடத்தின் முதல் தளத்தில் சமையல் அறை மற்றும் உணவு அருந்தும் அறை டு 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது
இதே போல் 12 வது வார்டில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் சித்தோடு பேரூராட்சி 12 வது வார்டு இந்திரா நகர் பகுதியில் ரூ.19 இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா மேம்பாடு செய்யப்பட்டு உள்ளது
அதனைத் தொடர்ந்து, நமக்கு நாமே திட்டம் சித்தோடு பேரூராட்சி 14 வது வார்டில் பாலாஜி நகர், ஆதித்யா நகர் மற்றும் ஆண்டாள் நகர் பகுதிகளில் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக போர்வெல் அமைத்து மின்மோட்டார் வைத்து 30,000 லிட்டர்
கொள்ளளவு கொண்ட குடிநீர் குழாய் அமைக்கப்பட்ட மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டுள்ளது
இவைகளை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திரு.பிரகாஷ். 1-ம் மண்டல குழு தலைவர் பி.கே.பழனிசாமி, மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.