காளையார் கோவில்: ஏப்:20
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் சட்டமன்றத்தொகுதி காளையார்கோவில் வடக்கு ஒன்றியம் தென்மாவளி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் திறந்து வைத்தார்.மாவட்ட திட்ட இயக்குனர் வானதி தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இரா.செல்வராஜ், முன்னாள் ஒன்றியக்கவுன்சிலர் மகாலிங்கம் காளையார்கோவில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர். எம். கென்னடி, ஒன்றிய அவைத்தலைவர் தமிழ் , சொக்கநாதபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், சைதையார் அசோக், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.