சங்கரன்கோவில் தொகுதியில் சிப்காட் அமையும் இடத்தை அமைச்சர் கே கே எஸ் எஸ்,ஆர், ராமச்சந்திரன் ஆய்வு
தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பொதுமக்களிடம் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் விரைவில் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு சிப்காட் தொழில் பேட்டை அமைக்கப்பட உள்ள நிலையில் சிப்காட் அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது அதன் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள குருக்கள்பட்டி சின்னக்கோவிலான்குளம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கான இடங்களை தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்
கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வருகை தந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து சிப்காட் அமைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன்,
ஆர்டிஓ கவிதா, வட்டாட்சியர் பரமசிவன், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், மற்றும் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை,
சங்கரன்கோவில் நகரக் கழக செயலாளர் பிரகாஷ் மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பால்ராஜ்,
புளியங்குடி நகர கழக செயலாளர் அந்தோணி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.