சென்னை, நவ-23, தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை நந்தனம் மீன்வளம் மற்றும் மீனவர் நல்வாழ்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில்
உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலதிட்ட உதவிகள் வழங்கினார்.
ஆறுகளில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்தல் மேலும் மாநிலத்தில் சிறந்த உள்நாட்டு இன மீன் வளர்ப்போர், சிறந்த வண்ண மீன் வளர்ப்பு, கடலில் மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்பு, சிறந்த மேலாண்மை நடைமுறையினை பின்பற்றும் மீன்பிடி துறைமுகம், சிறந்த மீனவர் கூட்டுறவு சங்கம், தமிழ்நாடு கடல் பிடி ஒழுங்குமுறை சட்டத்தினை திறம்பட செயல்படுத்திய பணியாளர்கள் குழு, மதிப்பு மிக்க விரால் மீன்கள் குஞ்சுகள் முதன்முறையாக அரசு மீன் பண்ணையில் உற்பத்தி செய்யும் சாதனை செய்த பணியாளர்கள் , சிறந்த விற்பனையாளர் ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது.
உலக மீனவர்கள் தினத்தையொட்டி நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கினார் .
இதனை தொடர்ந்து
தமிழ்நாடு மீனவர் நல வாரிய பயனாளர்களுக்கும் நன்னீர் மீன் வளர்ப்புக்கான குளங்களின் கட்டுமானம்,
சிறந்த ஒருங்கிணைந்த வண்ண மீன் வளர்ப்பு, பயனாளிகளுக்கு குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ரூபாய் 47 லட்சம் மதிப்பிலான மானியத்துடன் கூடிய பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் கால்நடை, பால்வளம், மீன்வளம்மற்றும் மீனவர் நலத்துறை அரசு முதன்மைச் செயலர் சத்ய பிரத சாகு, இயக்குநர் இரா.கஜலட்சுமி, அலுவலர்கள், மீனவர்கள், மீன்வளர்ப்போர், மற்றும் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.