நவ. 15
மடத்துக்குளம் வட்டத்திலிருந்து உடுமலை நோக்கி செல்லும் அதிக பாரம் ஏற்றிய கனரக வாகனங்கள்.
கோமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று மாலை தமிழக TN 57 BM 8532 எண் கொண்ட கனிம வளம் கொண்டு செல்லும் லாரி காவல்துறையால் ஆய்வு செய்யப்பட்டு அதில் சுமார் 30 டன் வரை அதிக எடை இருந்தது. கண்டுபிடிக்கப்பட்டு தற்போது வரை அதன் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை காத்திருப்பு வேளையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த காத்திருப்பு சம்பவம் என்பது யாருக்காக?
எதற்காக?
ஏன்? என்பதை விரிவான அறிக்கையாக அனைத்து மக்களுக்கும் தெரியும்படி வெளியிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவதற்கு உதவிகரமாக இருக்கும்.
திருப்பூர் தெற்கு மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து அதிகப்படியான கனிம கொள்ளை சம்பவங்கள் நடந்தேறும் சூழ்நிலையில் இவ்வாறு கையும் களவுமாக பிடிக்கப்பட்ட கனிம வள கொள்ளை அதிக எடை வாகனத்தையும் கூட நடவடிக்கை எடுக்காமல் அது எங்கிருந்து வந்தது, அதற்கான அனுமதி விபரங்கள் போன்ற எதையும் கண்டுகொள்ளாமல் சட்டத்தின் ஆட்சியை நீர்த்துப்போக செய்யும் வேலையில் ஈடுபடுவதை தமிழக விவசாயி பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
உடனடியாக அபராதம் விதித்து அந்த வாகனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர் குற்றங்களில் ஈடுபடும் கனிம வள கொள்ளை வாகனங்களை அரசுடமையாக்க வேண்டும்.
தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதி, அரசாணை 19 மற்றும் 170 அடிப்படையில் கனிமவள கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைப்போம்.
இப்படிக்கு
இரா. சதீஷ் குமார்
மாநில செயலாளர்
சட்ட விழிப்புணர்வு அணி
குப்புசாமி மாநில கூட்டுறவு அணி ஒருங்கிணைப்பாளர்
அவை தலைவர் திருப்பூர் தெற்கு மாவட்டம் வரதராஜ்
திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர்
செந்தில் குமார்
கேசவன் தென்னை அணி செயலாளர் திருப்பூர் தெற்கு மாவட்டம்
விஜயசேகர் உடுமலை ஒன்றிய செயலாளர். மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.