சென்னை, டிச-24, செமிகண்டக்டர் வடிவமைப்பு ஸ்டார்ட் அப் நிறுவனமான மைண்ட்க்ரோவ் டெக்னாலஜிஸ், நிதி திரட்டல் சுற்றில் $8 மில்லியன் டாலர் நிதியை திரட்டியிருப்பதாக அறிவித்திருக்கிறது.
இந்த சுற்று முதலீட்டை ராக்கெட் ஷிப் வி.சி மற்றும் ஸ்பெஷல் இன்வெஸ்ட்ஸ் இணைந்து நடத்தியுள்ளன.
இதில் மேளா வென்செர் மற்றும் முன்னணி முதலீட்டாளர்களான பீக் XV பார்ட்னர்ஸ் , வொயிட் போர்டு கேப்பிடல், நிஸ்சே கோயல் ஆகியோர் பங்குபெற்றுள்ளார்கள். புதிதாக அனுஷ் கோயல் இதில் இணைந்துள்ளார். இந்த மூலதன முதலீட்டை பயன்படுத்தி, தனது பணியாளர்களின் எண்ணிக்கையை விரிவாக்கவும் மற்றும் தனது பொறியியல் திறன்களை மேம்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இம்முதலீடானது, ” சிப் ” தயாரிக்கப்படுவதையும் மற்றும் விற்பனை செய்யப்படுவதையும் துரிதமாக்கும்.
இந்தியாவின் முதல் வர்த்தக தரத்திலான உயர் செயல்திறன் மைக்ரோகண்ட்ரோலர் சிஸ்டம்-ஆன்-சிப் என்ற பாதுகாப்பு சிஸ்டத்தை இந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. கைக்கடிகாரங்கள், மீட்டர்கள், பூட்டுகள் மற்றும் நுழைவுக் கட்டுப்பாடு யூனிட்கள் போன்றவற்றை இணைக்கப்பட்ட ஸ்மார்ட் சாதனங்களாக மாற்றுகிற எலக்ட்ரானிக் கருவிகளுக்காகவும் மற்றும் பிரிண்டர்கள் மற்றும் பி.ஓ.எஸ் மெஷின்கள் போன்ற ஆற்றலளிப்பு சாதனங்களுக்கும் இது பயன்படும். இந்த சிப் 2025-ம் ஆண்டின் மத்தியில் சந்தைபடுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.