நவ. 09
பால்வளத்துறை மற்றும் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கதர்துறை அமைச்சர் ஆவின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.எஸ்.வினித் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் ஆகியோர் தலைமையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், இராமம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் வீரபாண்டி பிரிவில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பால்வளத்துறை மற்றும் கதர்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பால்வளத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேடுப்புகளை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், பள்ளிக்குழந்தைகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் இன்றைய தினம், திருப்பூர் மாவட்டத்தில் இராமம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் வீரபாண்டி பிரிவில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இராமம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நாள் ஒன்றுக்கு 8,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.வீரபாண்டி பிரிவில் பால் குளிரூட்டும் நிலையத்தில் புதியதாக நிர்வாக அலுவலகக் கட்டடம் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பன்னீர் தயாரிப்பு ஆலை விரைவில் திறக்கப்படவுள்ளது. இதுபோன்று
பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆவின்
நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. என தெரிவித்தார்.