ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ள நாராயணபுரம் பகுதியில் பட்டா நிலங்களில் நள்ளிரவில் மணல் திருடுவது தொடர்ந்து நடைபெறுகின்றது
பின்னா், அதில் ஏற்பட்ட பள்ளத்தை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சவூடு மண், கருவேல மரங்களை போட்டு நிரப்பிச் செல்கின்றனர்
இதேபோல, கடந்த 10 நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் வாகனங்களில் மா்ம நபா்கள் மணல் திருட்டில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து வருவாய்த் துறையினா், காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மணல் திருட்டில் ஈடுபடுவோா், இதற்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தபகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்