ஆரல்வாய்மொழி ஜன 18
தாழக்குடி ஜங்ஷனில் எம் ஜி ஆரின் 108. வது பிறந்தநாள் விழா நடந்ததது. விழாவிற்க்கு முன்னாள் பேரூர் செயலாளர் மீனாட்சிநாதன் தலைமை வகித்தார். பேருர் செயலாளர் விஜயன், முன்னாள் தேர்வு கழகச் செயலாளர் சேது, அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தாழை காந்தி கலந்து கொண்டார்.விழாவில் எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. நிகர்ச்சியில் ரோகிணி அய்யப்பன் ஐயப்பன், முருகன், நாராயணன், கவுன்சிலர்கள் பாக்கியம்,ஜெயா, அழகம்மாள், வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.