ஆரல்மொழி ஜன 16
எம்.ஜி.ஆர் 108-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 17-01-2025, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள், கழக நிர்வாகிகள் அணி திரண்டு வாரீர் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம்; கூறியுள்ளார்.
இது தொடர்பாக கழக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திரைப்படங்களின் வாயிலாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துகளை கூறி மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் ஏழைகளின் தலைவன், புரட்சித்தலைவர் ஏழை, எளியோர் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்கள் தந்த மக்களின் ஏகோபித்த தலைவர் எம்.ஜி.ஆர் 108-வது பிறந்தநாள் விழா 17-01-2025, வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு காலை 10.30 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாநிலக் கழக நிர்வாகிகள் , மாவட்டக் கழக நிர்வாகிகள் , ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகள் , பேரூராட்சி, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள் , கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் , கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் , உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.