அனுப்பர்பாளையம், மார்ச்.5
திருப்பூர் வடக்கு மாவட்ட மாநகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா
நடை பெற்றது. விழாவுக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மேயர் ந.தினேஷ்குமார் தலைமை தாங்கினார். வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி
அலுவலகத்தை திறந்து வைத் , தார்.மனிதவள மேலாண் மைத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் குத்து விளக்கேற்றிவைத்தார். முடிவில் 15 வேலம்பா ளையம் பகுதி செயலாளர் கொ.ராமதாஸ் நன்றி கூறினார். இதில் சுப்பராயன் எம்.பி.,துணை மேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் எம்.எஸ்.மணி, பகுதிச் செயலாளர்கள் மின்னல் நாகராஜன், மண்டலத் தலைவர்கள் உமாமகேஸ்வரி சிட்டிவெங்கடாசலம், தம்பி கோவிந்தராஜ். மாநகர இளை ஞரணி அமைப்பாளர்கள் முத்துக்குமார், எம்.எஸ்.ஆர். ராஜ், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன்,ம.தி.மு.க.மாநகர் மாவட்ட செயலாளர் நாக ராஜ், கொ.ம.தே.க. மாநகர் மாவட்டதுணை செயலாளர் தம்பி வெங்கடாச்சலம் உள்ளிட்ட கூட்டணி கட்சிநிர்வாகிகள், தி.மு.க. மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, /வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.