சென்னை, நவ- 06,
மருத்துவ தொழில்நுட்ப துறையில் உலகளவில் செயல்படும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான மெரில் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், மெரில் நிறுவியிருக்கும் ஒரு மிக நவீன உற்பத்தி ஆலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் பட்டேல், வாபியில் அமைந்துள்ள மெரில் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இத்தொடக்கவிழாவில் நேரடியாக கலந்து கொண்டார்.
மெரில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஷா செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ சாதனங்களின் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியின் மூலம் உலகமெங்கும் இந்தியாவின் கால் தடத்தை வலுவாகப் பதித்திருக்கிறது. இதன் மூலம் மருத்துவ உபகரணங்களை இந்தியா இறக்குமதி செய்வதில் வெகுவாக குறைவதுடன் அந்நியச்செலாவணி பெற்றுத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது .
2024 குஜராத் உச்சி மாநாட்டின் போது மருத்துவ சாதனங்கள் துறையில் ரூ.910 கோடி புதிய முதலீடுகள் செய்ய குஜராத் மாநில அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தது. இன்றைய நாள் வரை 1400 கோடிக்கும் அதிகமான தொகையை மெரில் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது
2007-ம் ஆண்டில், நிறுவப்பட்ட மெரில் நிறுவனம், இதய இரத்தநாளம், எலும்பு முறிவியல், எண்டோ சர்ஜரி, அறுவைசிகிச்சைக்கான ரோபோட்டிக்ஸ் மற்றும் நோயறிதல் சாதனங்கள் என ஐந்து முக்கியமான பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. 10,000 – க்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் 150-க்கும் கூடுதலான நாடுகளில் செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் மெரில் 31 நாடுகளில் நேரடியான துணை நிறுவனங்களை நிறுவியிருக்கிறது. 12 நாடுகளில் இயங்கி வரும் இதன் கல்விசார் பிரிவான மெரில் அகாடமி, சமீபத்திய மருத்துவ தொழில்நுட்பங்களில் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நேரடி பயிற்சியினை வழங்கி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.