கலசலிங்கம்பல்கலை,
ஜெட் ஏரோஸ்பேஸ் ட்ரோன் கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், ஜெட் ஏரோஸ்பேஸ் ட்ரோஜன் ஹார்ஸ் கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்த விழா , வேந்தர்,முனைவர்
கே.ஸ்ரீதரன்தலைமையில் நடைபெற்றது .
துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன் , ஜெட் ஏரோஸ்பேஸ் நிறுவன சிஇஓ,ஆர்எஸ்.கிருத்திகா , புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பல்கலை துணைத் தலைவர் முனைவர்.எஸ்.சசி ஆனந்த் கூறுகையில், “இந்த புரிந்துணர்வுடன் ஒப்பந்தம் மூலம், பல்கலை ஏரோநாட்டிக்கல் துறையில் , சிறப்பு பாடத்திட்டங்கள், கருத்தரங்கு, மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி, வேலைவாய்ப்புகள், ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைகள் ஆகிய பல்வேறு கூட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் .” என்றார்.
நிகழ்ச்சியில் பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன், என்.ரஜினி, கே.சுப்ரகாஷ்,
எஸ்.ராஜேஷ கலந்து கொண்டனர்.
துறைத் தலைவர் ஜெ.சரத்குமார் செபாஸ்டின் நன்றி கூறினார்.