சங்கரன்கோவில். அக்.16
தென்காசி வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் களப்பாகுளம் கிராமத்தில் துவங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் லாலா சங்கர பாண்டியன்,மாவட்ட மகளிர் அணி தலைவர் அன்புமணி கணேசன், மாவட்ட மகளிர் அமைப்பாளர் சிவசங்கரி முன்னிலை வகித்தனர். தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்த வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தென்காசி வடக்கு மாவட்டத்தில் இல்லங்கள் தோறும் சென்று கழகத்திற்கு புதிய உறுப்பினர் சேர்க்கையை மகளிர் அணியினர் மேற்கொள்ள வேண்டும் என பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகரச் செயலாளர் பிரகாஷ், பேரூர் செயலாளர் மாரிமுத்து, மகளிர் அணி தலைவர் துணைத்தலைவர் அண்ணாமலை,துணை அமைப்பாளர்கள் கவிதா, சீதாலட்சுமி, பிரபாவதி மற்றும் வீரமணி, ஜெயக்குமார் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்