நாகர்கோவில் ஜூலை 26
கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தன்னிகரில்லா தலைவரும், குளச்சல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அமரர் ஜெயபால் பதினான்காவது நினைவு தினத்த முன்னிட்டு குருந்தன்கோடு வட்டார காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் நினைவு தினம் திங்கள் நகர் காமராஜர் பேருந்து நிலையத்தின் முன்பு வைத்து அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு குருந்தன்கோடு வட்டார தலைவர் ஜார்ஜ் ஜஸ்டின் தலைமை வகித்தார். திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன் மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஜாண் சௌந்தர் மற்றும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட அமரர் ஜெயபால் படத்திற்கு மாலைகள் அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் திங்கள் நகர் பேரூராட்சி உறுப்பினரும், குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ஜேக்கப், மாவட்ட விவசாய பிரிவு துணைத் தலைவர்கள் ஜாண் மில்டன், டோமினிக், தேவதாஸ் ,தலக்குளம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் மூர்த்தி, பொதுச்செயலாளர்கள் அல்போன்ஸ், பிரிட்டோ ஜெனிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.