மதுரை ஜூன் 10,
மதுரை மத்திய சிறை பணியாளர்களுக்கு தியானப் பயிற்சி மதுரை மத்திய சிறையில் பணிபுரியும் பணியாளர்களின் மனநலன் மற்றும் உடல் நலனை காப்பதற்காக அவ்வப்போது மனநல பயிற்சி மற்றும் தியான பயிற்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மத்திய சிறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மதுரை எம்.சி.கே.எஸ். பிராணிக் கீளிங் (பிராண சிகிச்சை) மையம் சார்பில் தியானம் மற்றும் பிராண சிகிச்சை பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியை மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமை ஏற்று துவக்கி வைத்தார். இப்பயிற்சியினை எம்.சி.கே.எஸ். பிராண சிகிச்சை பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வினோத் ராஜம் மற்றும் குழுவினர் நடத்தினார். இப்பயிற்சியில் சுமார் 95 பணியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.