தக்கலை பிப் 6
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண் தலைமையில் தக்கலையில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் தக்கலை காவல்துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனையை துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஏராளமான ஓட்டுநர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.