திருப்பூர்ஆக.13
மாவட்டத்தில் மட்டும் 44 இடங்களில் மருத்துவத் துறை சார்ந்த கட்டிடங்கள் 12 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணி திருப்பூரில் பேட்டி!
திருப்பூர் வேலம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கட்டுமான பணிகளை மருத்துவம் மற்றும் நல் வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்,
சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ்,மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார், மாநகராட்சி மேயர், தினேஷ்குமார், மண்டல தலைவர்கள் இல. பத்மநாபன்,
உமா மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் அனுசியா தேவி சண்முகசுந்தரம்,
அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணி ஜைகா நிதி நிறுவன உதவியுடன் இந்த அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாகவும். 47 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனையானது கட்டப்பட்டு வருவதாகவும் இந்த மருத்துவமனையில்
இரண்டு அதி நவீன அறுவை சிகிச்சை அரங்குகள்,அவசர அறுவை சிகிச்சை அரங்கு,டிஜிட்டல் முறையில் எக்ஸ் ரே., நோய் தொற்று கிருமிகள் நீக்கும் கருவிகள் என பல்வேறு வகையான மருத்துவ வசதியுடன் செயல்பட இருப்பதாகவும்பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்கலை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றுவதால் தற்போது 86 படுககைகள் கொண்ட இம்மருத்துவமனையை 100 படுக்கை களுடன் மேம்படுத்தப்படும். தற்போது மருத்துவமனை பணிகள் அனைத்தும் முழுமை பெரும் தருவாயில் உள்ளதாக தெரிவித்தவர், செப்டம்பர் மூன்றாவது வாரம் திறப்பு விழா நடைபெற உள்ளதாகவும் இதனை முதலமைச்சர் திறந்து வைப்பார் என தெரிவித்தவர். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 24 இடங்களில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களும்., இது போக பல்வேறு இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் கட்டிட கட்டுமான பணியானது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தவர் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 44 இடங்களில் மருத்துவத் துறை சார்ந்த கட்டிடங்கள் 12 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.