தென்தாமரைகுளம்., டிச. 10.அஞ்சுகிராமத்தை அடுத்த நெல்லை மாவட்டம், லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் ஊடக விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இவ்விழாவில் தலைமை விருந்தினராக சமூக ஆர்வலர் முனைவர் தி. கோ. நாகேந்திரன் கலந்து கொண்டார்.
மேலும் இப்போட்டியானது கல்லூரியின் நிறுவன தலைவர் கிருஷ்ணபிள்ளை மற்றும் துணை நிர்வாக இயக்குநர் அய்யப்ப கார்த்திக் ஆகியோரின் வழிகாட்டலின்படி தலைமை நிர்வாக அதிகாரி பொறியியாளர் ரெனின் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் தேவ். ஆர். நியூலின் ஆகியோர் தலைமயில் நடைபெற்றது மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெபிஷ், ஜோயல் ஜெபர்சன் மற்றும் ஆசிரியர் ரம்யா ஜாய் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். போட்டியில் கண்ணன்குளம் கிரிக்கெட் அணி வெற்றிபெற்று முதலிடம்பிடித்தது. வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.