ராமநாதபுரம் செப் 27
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 2112 விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் , உதவி ஆட்சியர் (பயிற்சி) முகம்மது இர்பான், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ், திமுக இளைஞர் அணி மாநில நிர்வாகி இன்பா ரகு ஆகியோர் உடன் இருந்தனர்.