நாகர்கோவில் ஜூலை 30
பிரதம மந்திரி தேசிய நிவாரண திட்டத்தின் கீழ் ஏழை நோயாளிகளுக்கு வழங்கும் தொகை அதிகம் பேருக்கு கிடைக்க செய்ய வேண்டும். விஜய்வசந்த் எம். பி பாராளுமன்றத்தில் பேச்சு
பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதியின் கீழ் ஏழை நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சைக்காக பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் எனவும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மேம்படுத்துவது குறித்தும் பாராளுமன்றத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி பேசினார்.
நேற்று பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய விஜய்வசந்த், பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியின் கீழ் நோயாளிகளின் சிகிச்சைக்கு அந்தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்து மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ஆனால் தற்பொழுது மிக குறைந்த அளவில் வருடத்திற்கு 10 நோயாளிகளை மட்டுமே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்ய முடியும் என்று நிலைமை உள்ளது. பல மக்கள் இந்த திட்டத்தை உபயோகப்படுத்தி நலன் பெற கருதி வருடத்திற்கு 150 நோயாளிகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு தேவையான முழு நிதியையும் பரிந்துரை கிடைக்கபெற்று தாமதமின்றி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தற்பொழுது சிக்சிட்சைக்காக அனுப்பும் பரிந்துரை தொகை முழுவதுமாக வந்து சேர்வதில்லை. மேலும் இந்த தொகை மிகவும் காலதமதமாக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது. அதுபோன்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவதில் பல்வேறு தடங்கல்கள் உள்ளன. அந்தத் தடைகளை நீக்கி அனைத்து ஏழை மக்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.