அரியலூர், ஜூலை:31
மதிமுக 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அரியலூர் மாவட்டத்தில் அக்கட்சியினர் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.
அரியலூர் அடுத்த வி.கைகாட்டி,தேளூர் ஜி.கே.எம் நகர்,குடிசல், தேளூர் கிராமம்,காவனூர், அம்பாப்பூர்,விளாங்குடி, ஓரத்தூர், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, கீழப்பழுவூர், ஆண்டிமடம், இரும்புலிக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் மதிமுக 31 ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் க.ராமநாதன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் சகாதேவன், ஒன்றியச் செயலர் அண்ணாதுரை, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சசிகுமார், நகர செயலர் சேகர், நிர்வாகி குடிசல் ராஜேந்திரன், தா.பழூர் ஒன்றியச் செயலர் எழிலரசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலர் ஆடுதுறை முருகன் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்