சென்னை, பிப் – 11, சேத்துபட்டு கிறித்துவ கல்லூரி மழையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் மாதிரி படைப்புகளுக்கான போட்டி நடைபெற்றது . இக் கண்காட்சியை இலோயலா கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர் ஸ்டாலின் ராஜ், மற்றும் இலோயலா கல்லுரி கல்லூரி எம்.எஸ்.சி மாணவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக லயோலா கல்லூரியின் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிரட்னியர் எனர்ஜி லைஃப் துறை இயக்குனர் முனைவர் செல்வநாயகம், கொலெஜன் நிறுவனத்தின் இயக்குனர் கௌசிக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினர்.
மேலும்
மெட்ராஸ் கிறித்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெபதாஸ் தினகரன் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை சபைன்பால், பள்ளியின் தாளாளர் சி.ஜி. மனோகர், ஆகியோர் அறிவியல் கண்காட்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த எம்.சி.சி பொதுப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் தாளாளர் ஜாலி மேத்யூ, எம் .சி .சி மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியை கிரேஸ் ஷீலா மற்றும்
சிறப்பு விருந்தினர், காண்காட்சியில் பங்கு கொண்ட மாணவர்கள், பெற்றோர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் முனைவர் செல்வ நாயகம் பரிசுகளை வழங்கினார் .
யூனியன் கிறித்துவ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய தேவையற்றவைகளை நீக்கும் ரோபோ ( obstacle Avaiding Robot ) முதலிடமும், டான்பாஸ்கோ பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ” ஸ்மார்ட் ஃபார்மிங் ” என்னும் நவீன விவசாயம் இரண்டாவது இடமும், யூனியன் கிறித்துவ மெட்ரிக் பள்ளி மாணவர் உருவாக்கிய ” ஸ்மார்ட் பார்க்” மூன்றாவதாகவும் பரிசைப் பெற்றனர்.
மேலும்
எம்.சி.சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ” மைக்ரோ கலெக்டர் ரோவர் ” சிறந்த அறிவியல் மேம்பாட்டிற்கான பரிசையும் எம்.சி.சி மெட்ரிக் மாணவர்கள் உருவாக்கிய கழிவுகளை பிரிக்கும் ரோபா ( Waste Segreation Robot ) நிலைத்த அறிவியல் மேம்பாட்டு படைப்பிற்கான பரிசையும் எம்.சி.சி பொதுப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய “கார்டியன் ஷீல்ட் ” சிறந்த காட்சிப் படுத்துவதற்கான பரிசையும் பெற்றது .
எம்.சி.சி மெட்ரிக் மாணவர்கள் உருவாக்கிய வேஸ்ட் சஜ்ஜசன் தல எம்சிசி பள்ளியின் தாளாளர் சி ஜி மனோகர் ரோபோடிக் லேப் உருவாக்க யூனியன் கிஸ் யூனியன் கிறிஸ்டியன் மெட்ரிக் மெட்ரிகுலேஷன் எம்சிசி மெட்ரிகுலேஷன் எம்சிசி மேல்நிலைப்பள்ளி எம் சி சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் முனைவர் செல்வ நாயகம் பரிசுகளை வழங்கினார் .
யூனியன் கிறித்துவ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய தேவையற்றவைகளை நீக்கும் ரோபோ ( obstacle Avaiding Robot ) முதலிடமும், டான்பாஸ்கோ பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ஸ்மார்ட் ஃபார்மிங் என்றும் நவீன விவசாயம் இரண்டாவது இடமும், யூனியன் கிறித்துவ மெட்ரிக் பள்ளி உருவாக்கிய ஸ்மார்ட் பார்க் மூன்றாவதாகவும், பரிசைப் பெற்றனர்.
எம்.சி.சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ” மைக்ரோ கலெக்டர் ரோவர் ” சிறந்த அறிவியல் மேம்பாட்டிற்கான பரிசினை பெற்றது .எம்.சி.சி மெட்ரிக் மாணவர்கள் கழிவுகளை பிரிக்கும் ரோபா ( Waste Segreation) நிலைத்த அறிவியல் மேம்பாட்டு படைப்பிற்கான பரிசினை பெற்றது. எம்.சி.சி பொதுப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய “கார்டியன் ஷீல்ட் ” சிறந்த காட்சிப் படுத்துவதற்கான பரிசை பெற்றது .