நாகர்கோவில் – நவ – 02,
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள கே.பி ரோட்டில் மழை நீர் வடிகால் ஓடையில் அந்தப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்களில் உள்ள கழிவுநீர் விடப்பட்டது உறிஞ்சி குழாய்கள் அமைக்காததால் கழிவுகள் அனைத்தும் மழை நீர் ஓடையில் விடப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் ஏற்பட்டது . இதை அடுத்து மேயர் மகேஷ் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வணிக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் உறிஞ்சி குழாய் இரண்டு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும். மழைநீர் வடிகால் ஒடையில் வீட்டில் உள்ள கழிவுகளையும் வணிக நிறுவனத்தின் கழிவுகளையும் விடக்கூடாது, என்று எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் வந்த பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் மழைநீர் ஒடையும் வீடு, வணிக நிறுவனங்களுடைய கழிவுகள் ஏதாவது விடப்பட்டுள்ளதா ? என்பதை குறித்த விபரத்தை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறுகையில் , டெரிக் சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலக ரவுண்டானாவரை மழைநீர் ஓடை உள்ளது. இந்த மழை நீர் ஓடையில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசியது தற்போது இந்த ஓடையை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தண்ணீர் தேங்காத வகையில் டெரிக் சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலக ரவுண்டான வரை தண்ணீர் செல்லும் வகையில் மழை நீர் ஓடை சீரமைக்கப்படுகிறது. இந்த ஓடை சீரமைக்கும் போது தண்ணீர் தங்குதடையின்றி தேங்காமல் சென்று விடும் வணிக நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பில் உள்ள கழிவுகளை இந்த ஓடையில் விடக்கூடாது மீறுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வணிக வர்த்தக நிறுவனங்களில் உறிஞ்சி குழாய் கண்டிப்பாக அமைக்க வேண்டும் டெரிக் சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் ரவுண்டானா வரை உள்ள பகுதியில் உள்ள மழை நீர் ஓடை சீரமைக்கப்படும் போது அந்தப் பகுதியின் மேல் நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் . அது போன்று வியாபாரிகள் கடையில் உள்ள பொருட்க்களை நடைபாதைகளில் பொருட்களை வைக்காமல் பொதுமக்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.