கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மேயர் ஆய்வு
நாகர்கோவில் அக் 17
கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால், பிள்ளைத்தோப்பு கடற்கரை கிராமங்களில்
வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்று அழுத்தம் காரணமாக கடல்சீற்றம் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளில் கடல்நீர் புகுந்து மண் மூடியுள்ள நிலையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற மேயர் மகேஷ் பார்வையிட்டு.அழிக்கால் மற்றும் பிள்ளைத்தோப்பு ஊர் திருமண மண்டபங்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய் மற்றும் பெட்ஷீட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.மேலும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் , நிதி மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரிடம் பாதிப்புகளை அலைப்பேசி வாயிலாக தெரிவித்து.நிரந்தர தீர்வாக 200 மீட்டர் தூர தூண்டில் வளைவு கட்டி தர கோரிக்கை வைத்தார்.