Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulviசென்னை, , அக்டோபர் -25, உயர்நிலை 3டி அனிமேஷன் கேமிங் & வி.எஃப். எக்ஸ் பயிற்சியில் முன்னோடியான மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு கிரியேட்டிவிட்டி மாணவர்களுக்காக ஒரு சிறப்பு வெபினார்-ஐ ஏற்பாடு செய்து, அவர்களுக்கு கல்கி 2898 ஏ.டி திரைபடத்தின்
நுணுக்கங்களை பயிற்சியாக மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு கிரியேட்டிவிட்டி வழங்கியது.
இதில் 5000 மாணவர்களுக்கு 3டி அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பற்றிய தொழில் நுட்பத்தை நுணுக்கமாக கற்பதற்கு ஒரு சிறப்பு வெபினார் அணுகலை ஏற்படுத்தி தந்தது.
இதுகுறித்து ஆப்டெக் லிமிடெட், குளோபல் ரீடெய்ல் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி சந்தீப் வெலிங் கூறுகையில்: “ மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு கிரியேட்டிவிட்டியில் , இளைஞர்களின் திறனை மேம்படுத்தல் மட்டுமின்றி, ஊடகம் மற்றும் பொழுது போக்கு தொழில்துறையில், மாணவர்களை தயார்படுத்துவதில் பிஹைண்ட் தி ஸ்கிரீன்ஸ் போன்ற முன்முயற்சிகள் மற்றும் தளங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன . இது போன்ற பயிற்சிகள் மாணவர்களுக்கு மிகவும் அவசியமான தொழில்துறை பற்றிய புரிதலை வழங்கும் . தொழில் வல்லுநர்களுடன் கலந்துரையாடும் அமர்வுகள் கல்விப் பயிற்சிக்கும் மற்றும் தொழில்துறையின் தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எங்கள் மாணவர்களை சிறந்த தொழில் வல்லுநர்களுடன் இணைப்பதன் மூலம் திரைப்படத் தயாரிப்பின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.
இந்த வெபினார்- ஃபாண்டோம் எஃப்.எக்ஸ் பயிற்சியை சீனியர் கிரியேட்டிவ் ஹெட், ஆசிப் பூஷன் வழங்கினார்.
கல்கியின் காட்சி பிரபஞ்சத்தை கண்முன் கொண்டு வருவதற்கான கற்பனைத் திறன் மற்றும் தொழில்நுட்ப சவால்களை மாணவர்களுக்கு பாடமாக நடத்தினார். இந்த நேரடி விளக்கப் பாடமானது, சமீபத்திய இந்திய சினிமாவில் பார்ப்பதற்கு மிகவும் பிரமிக்க வைக்கும் திரைப்படங்களில் ஒன்றின் தயாரிப்பில், ஒரு அரிய தோற்றத்தை வழங்கி, திரைப்படத்தின் சிக்கலான வி.எஃப் எக்ஸ் காட்சிப்படுத்தியது என்றார் .nar dapibus leo.