நாகர்கோவில் பிப் 19
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட அரசு தரப்பில் முயற்சித்து வருவதாக அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக முத்துக்குமார் கூறியதாவது:-
” கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப் பாலம் இந்தியாவிலேயே பிரசித்தி பெற்றதாகவும், பிரமிக்கக் கூடியதாகவும் இருந்துக் கொண்டிருக்கிறது. இந்த பாலம் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் நேரடி முயற்சியால், இயற்கை வளம் மற்றும் விவசாய மேம்பாட்டை முன்னிறுத்தும் வகையில் கட்டப்பட்ட பாலமாகும். மேலும் காமராஜர் நாகர்கோவில் பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி யாகவும் தேர்வு செய்யப் பட்டதை தொடர்ந்து, மாத்தூர் தொட்டிப் பாலம் அவரது நேரடி கண்காணிப்பிலே இருந்திருக்கிறது. எனவே மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். அதனை மனுவாக ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு அரசு,” தாங்கள் அனுப்பியுள்ள மனுமீது 30 நாட்களுக்குள் எடுக்கப்பட்டு விபரம் தெரிவிக்கப்படும்” என்று அரசு தரப்பில் விளக்கம் தெரிவித்துள்ளது.
எனவே மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட அரசு முன் வரும் பட்சத்தில், மாத்தூர் தொட்டிப் பாலம் எந்நாளும் காமராஜரின் பெயரை பிரதிபலிக்கும் நினைவு சின்னமாக இருக்கும் எந்த சந்தேகமும் இல்லை ” என்று தெரிவித்தார்.