ஈரோடு பிப் 11
சித்தோடு நால்ரோடு ஐய்யந் தோட்டத்தில் மங்களாம்பிகை உடனமர் மாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது கடந்த 8 ந் தேதி காலை தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. அன்று மாலை விக்னேஷ்வர பூஜை பாலாயத்தில் உள்ள இறை சக்திகளை கும்பத்தில் எழுந்தருள செய்தல் யாகசாலை தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன 9 தேதி இரண்டாம் காலயாக வேள்வி மற்றும் விமான கலச ஸ்தாபனம் மற்றும் மூன்றாம் காலயாக வேள்வி தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது இதை தொடர்ந்து இன்று காலை விக்னேஸ்வர் பூஜை மற்றும் நான்காம் கால வேள்வி பூஜை நடந்தது . தொடர்ந்து மங்களாம்பிகை உடனமர் மாதேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது இந்த கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார் சிவமூர்த்தி மற்றும் ருத்ர பசுபதி சிவம் ஆகியோர் நடத்தி வைத்தனர் பிறகு மகா அபிஷேகம் தச தரிசனம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன
கும்பாபிஷேக விழாவையொடடி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.