நாகர்கோவில் ஏப் 6:
ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், கல்வித்துறையில் ஆட்சியர் உட்பட கல்வி சாரா அலுவலர்களின் நெருக்கடிகளை தவிர்த்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு முதுநிலை பட்டாதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் பெத்தலகேம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.
காலையில் மையத்திற்கு வந்த ஆசிரியர்களுக்கு கோரிக்கை அட்டையும் துண்டு பிரதியும் வழங்கப்பட்டன.
தவறிழைக்காத ஆசிரியர்கள் மீது போடப்படும் பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கு உரிய நீதி விசாரணையும் பணிப் பாதுகாப்பும் வேண்டும்.
22 ஆண்டுகளுக்கு மேல் போராடிவரும் வாழ்வாதார உரிமையாளர் பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அறிஞர் அண்ணா வழங்கிய உயர்கல்விக்கான ஊக்க ஊதியம்,
கலைஞர் வழங்கிய ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை போன்றவற்றை உடனே அமல்படுத்த வேண்டும்.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் உயர்கல்விக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டஅனைத்து நலத்திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
நீட் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு உழைப்பூதியம், ஈடுசெய் விடுப்பும் மற்ற பிற பணிகளில் ஈடுபடுத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பும் வழங்கிட வேண்டும்.
ஆய்வு என்ற பெயரில் முதுகலை ஆசிரியர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உள்பட கல்வி சாரா அலுவலர்களின் நெருக்கடிகளை தடுத்து நிறுத்திட வேண்டும்.
எம்மிஸ் உள்ளிட்ட கற்றல் சாரா பணிகளை தவிர்த்து,
தமிழ்நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் பயிலும் மூன்றாம் கலை பிரிவுக்கும் மொழி பாடத்திற்கும் மாணவர்கள் நலன் கொண்டு நிரந்தர கூடுதல் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள்
திருத்தம் மையங்களில் ஆசிரியர்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டனர். தமிழ்நாடு
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்
மாவட்டத் தலைவர் பென்னட் ஜோஸ்,மாவட்டச் செயலாளர் சிபு, மாவட்ட பொருளாளர்
காஜா கமாலுதீன், மாநில தனியார் பள்ளி செயலாளர் அஜின், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் மலர் சாலமன் அம்பிகா , ஜில்ட் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் வட்டார நிர்வாகிகள் இப்பணிகளில் ஈடுபட்டனர்.