தென்காசி மாவட்டம் தமிழக அரசின் தொடர் மின்கட்டண உயர்வை கண்டித்தும் , திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி மாதம்தோறும் மின்கணக்கீட்டு முறையை உடனடியாக அமுல்படுத்தக்கோரியும் , விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கண்டித்தும் தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது மஹ்மூத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நூர் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட துணைத்தலைவர் யாசர்கான், மாவட்ட செயலாளர் முத்துமுஹம்மது, மாவட்ட பொருளாளர் கல்வத் கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது நைனார், ஹமீதா பானு , எஸ்டிடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அப்துல் கரீம்,வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் முஹம்மது கனி, மாவட்ட துணைச்செயலாளர்கள் அபுதாஹிர், இம்ரான் கான்,மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் , மகளிரணி மாவட்ட தலைவர் பரக்கத் நிஷா, மாவட்ட செயலாளர்கள் ஹதீஜா, சுலைகாள், மாவட்ட பொருளாளர் ஆயிஷா,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தில்ஷாத், ஆயிஷா,வேளாண் அணி மாவட்ட பொறுப்பாளர் முஹம்மது காசிம், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் அஸ்கர் அலி, மாவட்ட பொருளாளர் அப்துல் ரகுமான்,சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் ஹக்கீம், மாவட்ட செயலாளர் ஷேக்முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் கலந்து கொண்டு
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் , சொத்து வரி, குடிநீர் கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என பொதுமக்களின் மீது சுமைக்கு மேல் சுமையை இந்த அரசு ஏற்றி வருவதாகவும் குற்றம் சாட்டி உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை திருப்பப்பெற வேண்டும் எனவும் திமுக தேர்தல் வாக்குறுதிப்படி மாதம் தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டி கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழர் விவசாயம், நீர்வள பாதுகாப்பு சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் டேனி அருள்சிங் (அஇஅதிமுக ), எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் சிக்கந்தர் , மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் திவான் ஒலி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். நகர தலைவர் ஷேக் மைதீன் நன்றி உரை ஆற்றினார் .