தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி,ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க அரசைக் கண்டித்து தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுகழகம் சார்பில்
தடங்கம் பெ சுப்ரமணி மற்றும் முனைவர் பி.பழனியப்பன் ஆகியோர் தலைமையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி மற்றும் தர்மபுரி நகர கழக செயலாளர் நாட்டான் மாது முன்னிலையில்
தருமபுரி BSNL அலுவலகம் அருகில் பா.ஜ.க ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உடன் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் பி.என்.பி.இன்பசேகரன்,முன்னாள் எம்.பி.தாமரைச்செல்வன்,நகர் மன்ற தலைவர் லட்சுமி மாது,மற்றும் 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.