நாகர்கோவில் – டிச- 12,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் பாபு தலைமையில் வணிகர்களுக்கு சுமையாக கடைகளின் வாடகை மீதான 18% வரி விதிப்பை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், மாநில அரசு ஆண்டுதோறும் 6% கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்ப பெற்றிட வலியுறுத்தியும், வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்ய கோரியும் , குப்பை வரி மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவித்திட வலியுறுத்தியும் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம் சிங், மேற்கு மாவட்ட செயலாளர் ரவி,கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆதி சிவன், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பொருளாளர் கோபன், மாநிலத் துணைத் தலைவர் அலெக்சாண்டர், ஜோசப் ராஜ், கார்த்திகேயன், துரைராஜ், மாநில இணைச் செயலாளர் பொன்னுசாமி, விஜயன்,நாராயணன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரவைப்பு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் அல் அமீன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பால்ராஜ், தகவல் தொழில்நுட்ப சங்க கூட்டமைப்பு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி தலைவர் சுனில் குமார், மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் சுந்தர்ராஜ், கன்னியாகுமரி மாவட்ட திருமண மண்டப உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் சிதம்பர தாணு, கன்னியாகுமரி மாவட்ட அச்சக உரிமையாளர்கள் சங்க தலைவர் மோகன், கன்னியாகுமரி மாவட்ட மருந்து வணிக சங்க தலைவர் குமார், கன்னியாகுமரி மாவட்ட டெலிகாம் ரீடைலர்ஸ் அசோசியேஷன் செயலாளர் விமல் ஜெபசிங், அகில இந்திய கட்டுமான வல்லுநர் சங்ககன்னியாகுமரி மைய தலைவர் ராஜேஷ், கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் வீடியோ கிராபர் அசோசியேஷன் தலைவர் நாராயணன் ஆகியோர் ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றினார், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் பைஷல் நிஷார் நன்றியுரையாற்றினார். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.