நாகர்கோவில் ஆக 21
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பட்டதாரி ஆசிரியர் கழக ஆசிரியர்கள் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் – இதில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த காலத்தில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை செய்யும் ஆசிரியர்களுக்கு சம்பந்தமில்லாத பிற பணிகளை ஆசிரியர்கள் மீது தினித்து சக்யாக பிழிந்து எடுப்பதாக தமிழக அரசுக்கு ஆர்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கபட்டது. இதனால் மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளும் முடக்கப்படுவதாகவும், மாணவர்கள் மத்தியில் இதனால் அமைதியின்மையும் ஒழுங்கீனச் செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிபடி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரியும். அனைத்து பள்ளிகளிலும் சுகாதார வசதிகள். நவீன கழிவறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேலவன் தலைமை தாங்கினார்.
மாவட்ட இணை செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனட் ஜோஸ், தொழில் கல்வி ஆசிரியர் கழகமாநில துணைத்தலைவர் நாகராஜன், தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் டோமினிக்ராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.