தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு வங்காளதேச நாட்டில் இந்து மக்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதை கண்டிக்கின்ற வகையில் வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு மற்றும் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்காளதேசத்தில் உள்ள இந்து மக்கள் படுகொலையை கண்டித்தும் இந்து மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கோரிக்கைகளை வைத்து தென்காசி மாவட்ட வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
இதனால் தடையை மீறி தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு மற்றும் இந்து முன்னணி பாஜக நிர்வாகிகள் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் ஜி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத் ,பாஜக உள்ளிட்ட நிர்வாகிகள் 141 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு பதட்டமும் ஏற்பட்டது.