ராமநாதபுரம், டிச.8-
டிச.6 பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் எஸ்டிபிஐ இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் தேவிப்பட்டினத்தில், இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சி தமிழ் மாநில செயலாளர் நஜ்மா பேகம் கண்டன உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் நஜீம் வரவேற்றார். மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமை உரையாற்றினார். இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் மொஹிதீன் கண்டன கோஷம் எழுப்பினார், திருவாடானை சட்டமன்ற பொறுப்பாளர் ஹனீப் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் கருத்துறை வழங்கினார் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் கருத்துரை வழங்கினார்.
மாவட்ட துணைத் தலைவர் சுலைமான் மாவட்ட செயலாளர் ஆசாத் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நவ்வர்ஷா, செய்யது அலி பொருளாளர் ஹசன் அலி, மீனவர் அணி மாவட்ட தலைவர் பகுருதீன் எஸ் டி டி யு மாவட்ட தலைவர் காதர் கனி பொறியாளர் அணி மாவட்ட தலைவர் சேக் ஜலால் ஊடக அணி மாவட்ட தலைவர் சுபைர் ஆப்தீன் சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் நதிம் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சுலைமான் மற்றும் அனைத்து தொகுதி நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள், பாபரி மஸ்ஜித்துக்கு நிகழ்ந்த அநீதிபோல, இனியொரு வழிபாட்டுத் தலத்துக்கு நிகழ்ந்திடாதவாறும், சமூக நல்லிணக்கத்தை காக்கும் வகையில், வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டம் (1991) செயல்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், சட்டத்தின் நீதியும், அமைதி நல்லிணக்கம் நிலைபெறவும், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை கீழ்நீதிமன்றங்கள் விசாரிக்கவோ, வழிபாட்டுத் தலங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கீழ்நீதிமன்றங்கள் உத்தரவிடவோ உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், ஜமாத்தார்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எஸ்டிபிஐ கட்சியின் செயல் வீரர்கள் வீராங்கனைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.