அரியலூர், நவ;13
அரியலூர் மாவட்ட நகரில் அண்ணா சிலை முன்பு வக்ப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் சம்சுதீன் தலைமையில், சபீபுல்லா சையத் ரஷீத், அய்யுப் கான், அலாவுதீன் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்ப் வாரிய திருத்த சட்டத்தில் தர்மமாக இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை அபகரிக்கும் மத்திய அரசாங்கம். வக்ப் வாரியத்தின் அதிகாரங்களை முற்றிலும் அபகரித்து ஆட்சியர்களுக்கு வழங்குவது முஸ்லிம்களின் எதிர்ப்பு.வக்ப் வாரிய உறுப்பினராக இரண்டு முஸ்லிம் அல்லாதவரை நியமிக்க கூடிய நடைமுறை பலவீனப்படுத்தி நிலங்களை அபகரிக்கும் செயல்.வக்ப் வாரிய தீர்ப்பாயத்தை நீர்த்துப்போகச் செய்துள்ளனர். இந்த சட்ட திருத்த மசோதாவை ஆளும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்