மதுரை செப்டம்பர் 8,
மதுரை மாநகராட்சியில் வெகுஜன தூய்மை பணி – மாஸ் கிளினிக்யை
தொடங்கி வைத்த மேயர்
மதுரை மாநகராட்சி தல்லாகுளம் பகுதிகள் அழகர் கோவில் பிரதான சாலை பகுதிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை பகுதிகள், மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெகுஜன தூய்மை பணிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் மேயர் உத்தரவின்படி கடந்த நான்கு வாரங்களாக சனிக்கிழமை தோறும் வெகுஜன தூய்மை பணி (Mass Cleaning work) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர் நிகழ்வாக மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.33 தல்லாகுளம் பகுதிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள் அழகர்கோவில் பிரதான சாலை பகுதிகள் மற்றும் மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலைய பகுதிகளில் வெகுஜன தூய்மைப்பணியினை மேயர், ஆணையாளர் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.33 மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலைய வளாகத்தில் தூய்மைக்கான உறுதிமொழி மேயர் தலைமையில் அனைத்து பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மண்டலம் 3 ஆரப்பாளையம் பேருந்து நிலையம் பகுதிகள், மண்டலம் 4 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பகுதிகள், அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதான சாலை பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் வெகுஜன தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நடைபெற்ற தூய்மை பணிகளில் மொத்தம் 250 தூய்மைப் பணியாளர்கள். 3 தூய்மை மேற்பார்வையாளர்கள், 2 சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். மேலும் தூய்மைப்பணிக்காக 1 ஜே.சி.பி.இயந்திரம், 1 ரோபோ. 1 கழிவுநீர் அகற்றும் மினி ஜெட் வாகனம். 1 கழிவுநீர் உறிஞ்சு வாகனம் ஆகிய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, சுகாதாரக்குழுத் தலைவர் ஜெயராஜ், நகர்நல அலுவலர் மரு.வினோத் குமார். உதவி ஆணையாளர் கோபு, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் காமராஜ், உதவிபொறியாளர் (வாகனம்) ரிச்சார்டு, சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார். மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.