அரியலூர்,ஜூன் 22:
நீட் தேர்வுக்கு எதிராக அரியலூர் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில்,ஏழை குழந்தைகளின் கல்வியையும், உயிரையும் பறிக்கும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்டை ரத்து செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், பரமசிவம்,வெங்கடாசலம், அம்பிகா, அருணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர்.