கரூர் மாவட்டம் – அக்டோபர் – 29
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டாவது மாநாடு ரெட்டியப்பட்டி சீதாராம் யெச்சுரி நினைவரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ராமசாமி. பழனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில். மாநாட்டு கொடியை மூத்த உறுப்பினர் பிச்சை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து இறந்த தலைவர்களுக்கு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
மேலும் காவிரி ஆற்றில் இருந்து உபரி நீரை குழாய் மூலம் கொண்டு வந்து கடவூர் ஒன்றியத்தில் உள்ள குளங்களுக்கு நிரப்பிட வேண்டும்.
100 நாள் வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும்.
கடவூர் வட்டத்தில் தரகம்பட்டி மையத்தில் நீதிமன்றம் அமைத்திட வேண்டும்
மைலம்பட்டி அரசு மருத்துவமனையை விரிவுபடுத்தி போதுமான மருத்துவர், செவிலியர் நியமனம் செய்திட வேண்டும்
தரகம்பட்டி பகுதியில் பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை வட்டக் குழு உறுப்பினர் வேல்முருகன் முன்மொழிந்தார்.
மாநாட்டை வாழ்த்துரை பி.ராமமூர்த்தி ஒன்றிய கவுன்சிலர், வட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாநாட்டின் நிறைவுறையாற்றினார்கள்.