இராமநாதபுரம் அக்10-
இம்மானுவேல் சேகரனாரின் 100 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது உருவப்படம் திறந்து வைத்து 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 100வது பிறந்தநாள் விழா இன்றைய தினம் முதல்முறையாக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
தனியார் மகாலில் அவரது உருவப்படம் திறக்கப்பட்டு பால் வளம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன், மனித வளம் மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் உள்ளிட்டர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
அதன் பின்பு 50 பயனாளிகளுக்கு 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
பின், இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.