வேலூர்_23
வேலூர் மாவட்டம் வேலூர் பில்டர் பெட் ரோட் ஆசிரியர் இல்லத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் மற்றும் அவர்தம் வழித்தோன்றல்கள் நலன் சங்கம் சார்பில் மாவட்டத்தின் முதலாண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் எம். சேட்டு, தலைமை தாங்கினார். இதில் சங்கச் செயலாளர் டி.எம்.சண்முகம், (ஓய்வு காவல் உதவி ஆய்வாளர்) முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் டி. பன்னீர்செல்வம். வரவேற்புரையாற்றினார். இந்நிலையில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு என தனியாக ஒரு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன போன்ற 5 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் வேலூர் மாவட்டம் சுதந்திர போராட்ட வாரிசுகள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியின் நிறைவாக செயற்குழு உறுப்பினர் வி .கருணாநிதி நன்றியுரையாற்றினார் .