பரமக்குடி,அக்.10 : பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரின் நூறாவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தமிழக அரசு அரசு விழாவாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் முதல் அரசு விழா பரமக்குடியில் உள்ள லேனா திருமண மஹலில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் தலைமை வகித்தார் . தமிழக அரசு சார்பாக பால்வளம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ரூ. 52 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் டெல்லி பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன், எம் எல் ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முருகேசன், தமிழரசி, சண்முகையா, எம் பி நவாஸ் கனி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன். பரமக்குடி நகர்மன்ற உறுப்பினர் சேது கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், பரமக்குடி நகர் மன்ற துணைத் தலைவர் குணா, தியாகி இமானுவேல் சேகரன் மகள் பிரபா சுந்தரராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரன் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இறுதியில் நகர் மன்ற உறுப்பினர் பிரபா சாலமன் நன்றி கூறினார்
பட விளக்கம்
பரமக்குடியில் தியாகிய இமானுவேல் சேகரனின் அரசு விழாவினையொட்டி இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜுத் கலோன் பால்வளம் மற்றும் கதர் துறைஅமைச்சர் ராஜ கண்ணப்பன், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.