மார்த்தாண்டம், பிப்- 9
மார்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம் பகுதியை சேர்த்தவர் ஜான் ரோஸ் (58). மரம் ஏறும் தொழிலாளி. நேற்று ஜான் ரோஸ் மணலிக்காட்டு விளை பகுதியில் உள்ள பனை மரத்தில் நுங்கு வெட்டுவதற்காக ஏறியுள்ளார். அவர் மரத்தில் நுங்கு வெட்டிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற மார்த்தாண்டம் போலீசார் ஜான்ரோஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவ தொடர்பாக அவர் மனைவி லீலா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.