மதுரை டிசம்பர் 15,
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மார்கழி உற்சவம் மற்றும் 2025 ல் திருவெண்பா உற்சவம் & ஆருத்ரா தரிசனம்
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சொக்கநாதப்பெருமானே பல்வேறு அவதாரமெடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புண்ணிய தைலமாகும். இத்திருக்கோயில் 1434ம் பசலி தனூர் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் 18- 12- 2024 முதல் 14- 01- 2025 முடிய சிறப்பாக நடைபெறவுள்ளது. மேற்படி நாட்களில் அதிகாலையில் சேவார்த்திகளுக்கு திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக வழக்கம் போல் திருஞானபால் வழங்கப்படவுள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் இத்திருக்கோயில் வெளிக்கோபுர கதவுகள். அதிகாலையில் 3.30 மணிக்கு திறக்கப்பட்டு, உச்சிக்கால பூஜை முடிந்து நண்பகல் 12 மணிக்கு நடைசாத்தப்படும். பின்னர் மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு பல்லாக்கு புறப்பாடாகி பூஜை ஆரம்பமாகி இரவு 9.30 மணிக்குள் பூஜைகள் முடிந்தவுடன் திருக்கோயில் நடைசாத்தப்படும் என்ற விபரத்தினை திருக்கோயில் நிர்வாக இணை ஆணையர் செயல் அலுவலர்
ஒ.ச.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை தொடர்ந்து இத்திருக்கோயிலில் 1434 ம் பலி எண்ணெய் காப்பு உற்சவம் மற்றும் அருளாளர் மாணிக்கவாசகர் திருவெண்பா உற்சவம் 2025 ஜனவரி 4 ந்தேதி முதல் ஜனவரி 13 ந்தேதி வரை பத்து நாட்கள் நடைபெறவுள்ளது. அருளாளர் மாணிக்கவாசகர் சுவாமிகள் 100 கால் மண்டபம் சன்னதி முன்பாக உள்ள சவுக்கையில் எழுந்தருளி தேவார கோஷ்டியினரால்
திருவெண்பா பாடி தீபாராதனை வகையறா முடித்தபின் 4 ஆடி வீதி சுற்றி வரும் ஜனவரி 13 ந்தேதி தேதி 10 ம் திருநாள் பொன்னூஞ்சல் அன்று இரவு அருளாளர் திருஞானசம்பந்தர் சுவாமிகள் சன்னதியில் திருவெண்பா பாடி முடிந்தவுடன் சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் சுற்றி வந்து சேத்தியாவர்.
மேலும் இதனை தொடர்ந்து அருள்மிரு நடராஜப் பெருமானுக்கு உகந்த மார்கழி தனூர் மாதத்திருவாதிரைத் தினத்தன்று நடைபெறுகின்ற ஆருத்ரா தரிசனம் 2025 ஜனவரி 12 ந்தேதி நள்ளிரவு முதல் 2025 ஜனவரி 13 ந்தேதி வரை அபிஷேகம் அதிகாலை பிரதான அபிஷேகம் நடைபெறும் இத்திருக்கோயிலில் மட்டும் தான் பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜர்க்குரிய ஐந்து உற்சவர் திருமேனிகள் உள்ளது 1. பொன்னம்பலம் 2 வெள்ளியம்பலம்,
3.ரத்தினசபை,4.தாமிரசபை, 5.சித்திரைசபை என பஞ்ச சபைக்கும் இந்திருக்கோயிலில் தனித்தனியாக உற்சவ திருமேனிகள் உள்ளன
பஞ்ச சபை கொண்ட இத்திருக்கோயில் அருள்மிகு நடராஜர், (கால் மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜர்) அருள்மிகு சிவகாமி அம்மன், அருளாளர் மாணிக்கவாசகர் சுவாமிகள் ஆகியோரது உற்சவத் திருமேனிகள் சுவாமி சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் எழுந்தருளியும் இதர 4 சபை அருள்மிகு நடராஜர், அருள்மிகு சிவகாமி அம்மன் 100 கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்தும் ஏக காலத்தில் இரு இடங்களிலும் அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறும். தொடர்ந்து கால பூஜைகள் முடிந்து காலை 7 மணியளவில் பஞ்ச சபை ஐந்து உற்சவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் 4 மாசி வீதிகளில் திருவீதி உலா வந்து சேத்தியாகும். பக்த கோடி பெருமக்களும், சேவார்த்திகளும் அபிஷேகப் பொருட்களான பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள் பொடி, திரவியப் பொடி, எண்ணெய் மற்றும் இதர அபிஷேகப் பொருட்களை 2025 ஜனவரி 12 ந்தேதி மாலை 7 மணிக்குள் திருக்கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்க கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, மேற்படி 04.01.2025-ம் தேதி முதல் 14.01.2025 தேதி முடிய உற்சவ நாட்களில் திருக்கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ, உபய தங்க ரத உலா, உபய திருக்கல்யாணம் மற்றும் உபய வைர கிரீடம் சாத்துதல் ஆகிய உபய சேவைகள் அனைத்தும் பதிவு செய்து நடத்திட இயலாது என்று செய்தி அறிக்கையில் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கண்ட விழாவிற்கான முன்னேற்பாடுகளை இத்திருக்கோயில் அறங்காவலர்கள், இணை ஆணையர்/செயல் அலுவலர் ச.கிருஷ்ணன் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.