சுசீந்திரம்.ஜன.13
சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோவிலில் மார்கழித் திருவிழா தேரோட்டம் நேற்று காலை 7:45க்கு துவங்கியது விநாயகர் தேர் சுவாமி தேர் அம்மன் தேர் ஆகிய தேர்களை அலங்கரித்து சுவாமி விக்கிரகங்களை 3 தேரிலும் அமர செய்தனர் பின்பு தேர்சக்கரத்தில் தேங்காய் உடைத்து தேரோட்ட நிகழ்ச்சி துவங்கியது பக்தர்கள் ரத வீதியை சுற்றி ஒரு முறை தேரை தொட்டிழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அம்மன் தேரை பெண்கள் மட்டும் இழுத்து வந்தனர் மதியம் 11 மணி அளவில் தேர்கள் நிலைக்கு வந்தன சுவாமிக்கு அலங்கார தீபாரனை காட்டப்பட்டு தங்க குடத்தில் காணிக்கை செலுத்தினர் பின்பு சாமி விக்கிரகங்கள் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டன இன்று இரவு 12 மணி அளவில் தனது தாய் தந்தையர்களுக்கு நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்ள வந்த கோட்டார் வலம்புரி விநாயகர் மருங்கூர் சுப்பிரமணியசுவாமி வேளிமலை முருகன் சுவாமி ஆகியோர் தனது தாய் தந்தைகளை மூன்று முறை வலம் வந்து பிரிந்து செல்லும் சப்தவர்ண காட்சி நடைபெறுகிறது. இன்று ஆருத்ரா தரிசனம் ஆராட்டு விழாநடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் பொதுமக்கள் செய்திருந்தனர்