கன்னியாகுமரி பிப் 18
குமரி மாவட்டத்தில் கலப்பை மக்கள் இயக்கம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து மகளிர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருப்பதாக அதன் நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் அறிக்கையை ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருப்பதாவது :-
உலகம் முழுவதும் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலக பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு கலப்பை மக்கள் இயக்கம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து கல்லூரி வளாகத்தின் அன்றைய தினம் மாலை 3 மணிக்கு பெண்களின் தரத்தை உயர்த்துவோம் என்ற தலைப்பில் இவ்விழா பெண்களுக்கான மாபெரும் புத்துணர்வு மாநாடாக கொண்டாடப்பட உள்ளது.
இம்மாநாட்டில், பெண்களுக்கான கல்வி, பாதுகாப்பு, சுயதொழில் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதன் மூலம் பெண்களை வாழ்வாதாரத்தில் முதலிடத்துக்கு கொண்டு வருவது குறித்து உறுதியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். மகளிர் அனைவரும் ஓரிடத்தில் திரள்வோம்.
இம்மாநாட்டில் பெண்களுக்கான முன்னேற்றம் குறித்து திரை நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.