கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆண்கள் பெண்கள் பங்கேற்ற மராத்தான் விளையாட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் ஒரு பிரிவாகவும், 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஒரு பிரிவாகவும், ஆண்கள் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர். இணைய வழியாக பெயர் பதிவு செய்து கொண்ட 200 கும் மேற்பட்டோர், இதில் கலந்துக் கொண்டனர். போட்டிகளை மாநில தடகள சங்க துணை தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கிய போட்டியானது, ராயக்கோட்டை மேம்பாலம், அண்ணா சிலை, பழைய பேட்டை வழியாக அரசு ஆடவர் கல்லூரி, பூசாரி பட்டி சென்று மீண்டும் விளையாட்டு மைதானம் வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யபட்டது. 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு
8 கிலோ மீட்டர், 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 கிலோ மீட்டர் என போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் , மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் மற்றும் 7 நபர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் என பரிசுகள் வழங்கபட்டது. உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியமான இந்த மாரத்தான் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.