ஈரோடு ஜூன் 23
நந்தா கல்வி நிறுவனங்களின் “மனிதம்” சமூக அமைப்பின் சார்பில் உலக குருதியாளர்கள் தினத்தினை முன்னிட்டு மாபெரும் மினி மாராத்தான் தொடர் ஓட்ட போட்டிகள் மற்றும் சிறப்பு ரத்தத்தான முகாம் நடைபெற்றது.
முதல் நிகழ்வாக, நத்தாவின் “மனிதம்” சமூக அமைப்பின் சார்பில் ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 15 வயது மேற்பட்டோருக்கான இருபாலர்கள் கலந்துக் கொண்ட மினி மாராத்தான் போட்டிகளை ஈரோடு நகர துணை காவல் கண்காணிப்பாளர் ஜெய்சிங், மனித வள முன்னேற்ற எழுத்தாளரும், பேச்சாளருமான ஈரோடு கதிர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்கள்.
இதில் ஆண்களுக்கான மினி மாராத்தான் வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி பெருந்துறை வாய்க்கால் மேட்டிலுள்ள நந்தா தொழில்நுட்ப வளாகம் வரையிலான 21 கிலோ மீட்டர் தூரத்தினைக் கடந்து முடித்தார்கள். அதுபோல பெண்களுக்கான மினி மாராத்தான் வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி ஈரோடு புது டீச்சர்ஸ் காலனியில் செயல்பட்டு வரும் நந்தா சென்டரல் சிட்டி பள்ளி வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்தினைக் கடந்து முடித்தார்கள்.
இரண்டாம் நிகழ்வாக, நந்தாவின் “உயிர்த்துளி” அமைப்பின் சார்பில் இரத்தத்தான சிறப்பு முகாம் நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமினை ஈரோடு கதிர் துவக்கி வைத்தார்கள். இம்முகாமில் நந்தா கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் தங்களது ரத்தத்தினை தானமாக வழங்கினார்கள்
இதனைத் தொடர்ந்து நந்தா பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், மினி மாராத்தான் தொடர் ஓட்டப் போட்டிகளில் முதல் 10 இடங்களை தக்க வைத்து வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பரிசுகளை
நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் .திருமூர்த்தி. முதன்மை கல்வி அதிகாரி முனைவர் ஆறுமுகம் ஆகியோர் மினி மாரத்தான் தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும். ரத்தத்தானம் வழங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறினர். மேலும்
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ச ஒருங்கிணைப்பாளர்கள் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ரகுபதி மற்றும் பிசியொதெரபி முதல்வர் மருத்துவர் மணிவண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.