ஈரோடு, ஆக. 31
ஈரோடு ரன்னர்ஸ் கிளப் சார்பில் மூன்றாவது முறையாக வருகிற செப்டம்பர் மாதம் 29 ம் தேதி மராத்தான் போட்டி ரங் கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இதனையொட்டி, மராத்தான் போட்டிகளில் பங்கேற்ப வர்களுக்கு வழங்க டீ-சர்ட் மற்றும் வெற்றி பெறுபவர்களுக் கான பதக்கங்கள் அறிமுக விழா ஈரோட்டில் நடைபெற்றது.
விழாவிற்கு ஈரோடு ரன்னர்ஸ் கிளப்பின் செயலாளர் பிரசன்னா தலைமை தாங்கினார். தலைவர் டாக்டர் அருந்ததி செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அக்னி ஸ்டீல் இயக்குனரும், ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவருமான சின்னசாமி, மிஸ்டர் கோல்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் கண்ணன் விகாஸ், ஈரோடு கலை அறிவி யல் கல்லூரியின் இயக்குநர் அருண்குமார் பாலுசாமி ஆகி யோர் பங்கேற்று மராத்தானுக்கான டீ-சர்ட், பதக்கங்களை அறிமுகப்படுத்தினர்.
விழாவினை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, உசைன் பட் டேல், நந்தகுமார், சந்தோஷ், டாக்டர் மகாலட்சுமி, பிரசன்னா, வசந்த், கருணாமூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இது குறித்து ஈரோடு ரன்னர்ஸ் கிளப் நிர்வாகிகள் கூறியதாவது
ஈரோடு ரன்னர்ஸ் கிளப் மூலம் கடந்த 2022ம் ஆண்டு நடத் தப்பட்ட மராத்தான் போட்டியில் 2,772 பேர் பங்கேற்று ஓடி னர். 2வது முறையாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மராத்தான் போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்க ளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற் றும் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர்கள் என 3,756 பேர் பங்கேற்றனர். ஈரோடு ரன்னர்ஸ் கிளப் மூலம் ஆயிரக்கணக் கானவர்களை மாரத்தான் ரன்னராக உருவாக்கியுள்ளோம். ஈரோடு ரன்னர்ஸ் கிளப்பை சேர்ந்தவர்கள் நாட்டில் கடின மான மராத்தான் என அழைக்கப்படும் லடாக் மராத்தானிலும் ஈரோடு ரன்னர்ஸ் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள் ளனர். நடப்பாண்டு ஈரோடு ரன்னர்ஸ் கிளப் சார்பில் மூன்றா வது முறையாக நடத்துகிறோம். வருகிற செப்டம்பர் மாதம் 29ம் தேதி மர தான் போட்டி ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில
நடத்தப்பட உள்ளது.
இதில், 5 கி.மீட்டர், 10 கி.மீட்டர், 21 கி. மீட்டர் என மூன்று வகையாக நடக்கிறது.
இதில், 8 வயது குழந்தைகள் முதல் 80 வயதிற்கு மேற் பட்ட இருபாலர்களும் பங்கேற்கலாம். ஆண்கள், பெண்கள் ஆகிய குழுவில் தனித்தனியே அவரவர்கள் வயதுக்கு ஏற்ப மூன்று, மூன்று பிரிவுகளாக பிரித்து மொத்தம் 54 பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதன் மொத்த பரிசு மதிப்பு ரூ.3 லட்சம் ஈரோடு மராத்தானில் கலந்து கொள்பவர்கள்
செப்டம்பர் மாதம் 15 ந் தேதிக்குள் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.